கிராஃப் கார் ஓட்டி,மகளை மருத்துவராக்க வாழ்வை அர்ப்பணிக்கும் திருமதி மாலா வெங்கடாச்சலம்
கப்பளா பத்தாஸ் ஜன 14 - தமது மகள் கீர்த்திகா பிரபாகரனை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற வேட்கையில்,தமது குடும்ப வருமானத்துக்காக கிராஃப் கார் ஓட்டும் மாலா வெங்கடாச்சலம் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியதுடன் அந்த பணியிலிருந்து திடீர் என ஆட்குறைப்பு காரணமாக தம்மையும் மற்ற பணியாட்களை வேலை நீக்கம் செய்ததாக மாலா வெங்கடாசலம் தெரிவித்தார். தொழிற்சாலை பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் குடும்ப வருமானத்துக்கு எதாவது வருமானம் ஈட்ட வேண்டும் என்பதால் கிராஃப் கார் ஓட்டும் பணிக்காக தமது தோழியின் ஆலோசனையின் பேரில் கிராஃப் கார் ஓட்டும் கடைப்பிதழக்கு விண்ணப்பம் செய்ததாகக் கூறிய மாலா, தமது இடது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் கிராஃப் கடப்பிதழ் கிடைக்குமா எனக் கவலையிலிருந்த போது,சில நாட்களுக்குப் பிறகு தமக்கு கிராஃப் ஒட்டுநராக அதன் கடப்பிதழ் கிடைக்கப் போக்குவரத்துக் கழகம் அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டு வழிப்பறி கொள்ளையினால் தமது இடது கண் பாதிக்கப்பட்டது அந்த இடது கண் பார்வை இது அவரை பாதிக்கப்பட்டுள்ளது.நன்றாகச் சென்ற தமது வாழ்க்கை தமது கண...