Posts

Showing posts from May, 2026

மஸ்ஜித் இந்தியா பாதாள சாக்கடையில் வீழ்ந்து மடிந்த விஜயலட்சுமியின் நீதிமன்ற முடிவை ஏற்கிறேன்- ஹன்னா இயோ அறிவிப்பு

Image
எஸ்.எஸ்.மணிமாறன்   கோலாலம்பூர், மே 9 - சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமி, இங்கு தலைநகரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பகுதியில் பொருட்கள் வாங்க வந்த நேரத்தில், எதிர்பாராமல் பாதாள சாக்கடையில் வீழ்ந்து மடிந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசின் அதிகாரிகள் பலரும் மாதக்கணக்கில் தேடல் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் உடல் கிடைக்காமல் போனதால் அதை பின்னர் கை விட்டனர்.  இறந்து போன விஜயலட்சுமியின் மகன் எம்.சூரியா என்பவர், வழக்குரைஞர் பார்த்திபன் மூலம் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் இறப்புச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால், அதை வைத்து வழக்கு சார்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் புவான் ஹன்னா இயோ, வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்றம் வழங்க விருக்கும் தீர்ப்பு முடிவுகளை தாம் ஏற்றுக் கொள்வதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கொண்ட அறிவிப்பை வெளியிட்டார்.-Alaiolinews

மோரிப்,டூசுன் டுரியான் திரௌபதி அம்மன் ஆலய 145 ஆவது வருடாந்திர விழாவில் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர்

Image
எஸ்.எஸ்.மணிமாறன் பந்திங், மே  -  இங்கு, மோரிப் சாலையில்,  தொங்கா சிற்றூரை ஒட்டி அமைந்துள்ள டூசுன் டுரியான் தோட்ட அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் 145 ஆவது வருடாந்திர பூக்குழி உற்சவத் திருவிழாவில் அழைக்கப் பட்ட முக்கிய பிரமுகர்களை ஆலய நிர்வாகத்தினர் வரவேற்று மாலை பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.  அந்த வகையில், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினரும் கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணித் தலைவியுமான திருமதி உமா நந்தினி ஞானப்பிரகாசம், ஆலய நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டு சிறப்பு செய்யப்பட்டார்.  ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஆலயத் தலைவர் ஆறுமுகத்தின் துணைவியார், உமா நந்தினியைக் கௌரவித்தார்.  அவருடன் கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணியின் துணைத் தலைவி வசந்தியும் கலந்து கொண்டார்.  நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியை ஆலயச் செயலாளர்  பெ.நாகராஜன் நேர்த்தியாக வழி நடத்தினார்.  வரும் 11.5.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி தொடக்கம், பக்தர்கள் மோரிப் கடற்கரைப் பகுதியில் இருந்து பால்குடம் காவடிகள் எடுத்து வந்து ஆலய வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பூக்கு...

மருத்துவ முகாம்களில் இந்தியர்களின் வருகை ஆரோக்கியமாக இல்லை - டத்தோ சிவநேசன் வருத்தம்!!

Image
பீடோர், மே 9- பொது மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் சுகாதார நிகழ்ச்சிகள்,மருத்துவ முகாம்களில் இந்தியர்களின் வருகை வருத்தம் அளிப்பதாக பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தனது கவலையை வெளிப்படுத்தினார். மலாய்காரர்களும் சீனர்களும் தங்களின் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் காட்டும் அக்கறை மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்வு இந்தியர்களிடையே இன்னமும் ஏமாற்றம் அளிக்கும் நிலையில் இருப்பது வருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார். பீடோர் டேவான் முகிபாவில் நடைபெற்ற காது,மூக்கு மற்றும் தொண்டைக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமைத் தொடக்கி வைத்து பேசிய பின்னர் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இதனைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றைய நிலையில் தனிமனித ஆரோக்கியம் அவசியமானது.ஒவ்வொருவரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவுறுத்திய அவர் பீடோர்,சுங்கை மற்றும் தாப்பா வாழ் மக்களுக்காக இந்த சுகாதார முகாமை ஏற்பாடு செய்த்ததாகவும் கூறினார். பொதுவாக இரத்ததானம...

பாரம்பரிய கலை மரபை மீட்டெடுத்த ‘நாட்டியஞ்சலி 2026

Image
கே.கே.ஆர்.தேவி ஜோகூர் பாரு, மே 10– “நாட்டியத்தின் வழி ஒரு சமர்ப்பணம்” என்ற கருப்பொருளில், நடராஜர் நாட்டிய ஆலயாவின் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி ‘நாட்டியஞ்சலி 2026’ கடந்த மே 1ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, பாரதநாட்டியத்தின் செழுமை, அதன் ஆன்மிக ஆழம், தமிழர் கலை மரபின் உயர்வை வெளிப்படுத்திய ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக அமைந்தது. மலேசியாவின் ஜோகூர் பாருவில் இயங்கி வரும் நடராஜர் நாட்டிய ஆலயா, பாரம்பரியம், ஒழுக்கம், கலை நயம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இளம் தலைமுறைக்கு கலைக் கல்வி வழங்கி வரும் முன்னணி கலை நிலையமாக திகழ்கிறது. இந்நிகழ்வை வழிநடத்திய குரு ஸ்ரீ ராஜேந்திரன் ஸ்ரீனிவாசர் அழகர், பல ஆண்டுகளாக பாரதநாட்டியத்துடன் இணைந்த பாரம்பரிய,  மக்கள் நாட்டிய வடிவங்களையும் அர்ப்பணிப்புடன் கற்பித்து வருகிறார்.  அவரது பயிற்சியில் வளர்ந்த மாணவர்கள், இந்நிகழ்வில் தங்களின் திறமை, அபிநய ஆழம், கலை ஒழுக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். குருவின் கற்பித்தல் முறையில் நாட்டிய நுட்பங்களோடு பக்தி உணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் ஒழுக்கம் ஆகியவை மு...

மக்கள் தீர்ப்பை மதிக்காத ஆட்சிமுறை ஜனநாயகத்திற்கு ஆபத்து - லினா மனோ அருண்!

Image
கே.கே.ஆர்.தேவி ஜோகூர், மே 10 – மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஐந்து பேரை ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க வழிவகுக்கும் அண்மைய சட்டத் திருத்தம், ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதாக மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசிய சக்தி பிரிவு துணைத் தலைவரும் ஜோகூர் மாநில சக்தி பிரிவு செயலாளருமான லினா மனோ அருண் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மையமாக மக்கள் வழங்கும் வாக்கும் ஆணையும் தான் இருப்பதாக அவர் கூறினார். அந்த நிலையில், மக்களின் நேரடி தேர்வின்றி சிலர் மாநில நிர்வாக முடிவுகளில் பங்கேற்கும் சூழல் உருவாகுவது, மக்களின் அதிகாரம் குறைக்கப்படுகின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது சாதாரண அரசியல் மாற்றமாக பார்க்கப்படக் கூடாது என்றும், “மறைந்திருக்கும் ஜனநாயக எச்சரிக்கை” எனக் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் அனைத்து அமைப்புகளும் வெளிப்படைத் தன்மை, மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் பொது பொறுப்புணர்வு ஆகிய அடிப்படை கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களே தங்கள்...

Ungkit nostalgia 27 tahun lalu, Taal dibikin sekuel!

Image
By Editor BAGI peminat filem Bollywood yang membesar pada era 1990-an, pasti tahu kehebatan filem Taal lakonan Aishwarya Rai, Akshaye Khanna dan Anil Kapoor. Filem yang ditayangkan pada 1999 itu menjadi fenomena bukan sahaja kerana jalan ceritanya menarik, tetapi lagu-lagunya yang indah dan malar segar. Kini berita gembira menanti anda termasuk di Malaysia apabila dalam perkembangan terbaharu, penerbit asal Taal, Subhash Ghai mengumumkan bahawa skrip filem Taal 2 dalam pembikinan dan hampir selesai sepenuhnya. Ramai peminat berharap dapat melihat gandingan Aishwarya dan Akshaye selepas 27 tahun. Bagaimanapun, Subhash berkata dia tidak akan mengambil pelakon lama kerana mereka sudah menjangkau usia. Antara nama yang hangat disebut-sebut bakal menjadi hero dan heroin dalam sekual iaitu Taal 2 ialah Ahaan Panday dan Aneet Padda.- Alaiolinews

MAICCI announces the demise of former MAICCI President, Tan Sri Dr Kenneth Eswaran

Image
By Alaiolieditor KUALA LUMPUR - It is with profound sadness and deep sorrow that the Malaysian Associated Indian Chambers of Commerce and Industry (MAICCI) announces the passing of former MAICCI President, Tan Sri Dr Kenneth Eswaran, who departed peacefully at approximately 6.00 a.m. today, 09 May 2026. On behalf of the entire MAICCI leadership and members nationwide, MAICCI President Dato' Seri N. Gobalakrishnan extends our heartfelt condolences to the family, loved ones, friends, and associates of the late Tan Sri Dr Kenneth Eswaran. Tan Sri Dr Kenneth Eswaran was a distinguished leader, respected entrepreneur, and visionary who contributed immensely to the growth and strengthening of MAICCI and the Indian business community in Malaysia. His leadership, dedication, and unwavering commitment towards empowering entrepreneurs and fostering economic development will always be remembered and cherished. Throughout his years of service, he played a pivotal role in advancing MAICCI’s mis...

Datuk culas bayar cukai jalan kereta mewah antara 188 kenderaan disita JPJ

Image
Oleh Ilamparithi SEREMBAN – Golongan usahawan, profesional termasuk individu bergelar Datuk antara pemilik kenderaan mewah yang culas memperbaharui cukai jalan sehingga menyebabkan kenderaan mereka disita Jabatan Pengangkutan Jalan (JPJ) Negeri Sembilan. Pengarah JPJ Negeri Sembilan, Jasyindar Singh Sihdu berkata, dalam tempoh Ops Khas Pengarah yang dijalankan sepanjang tahun lalu dan bagi tempoh April tahun ini, sebanyak 188 kenderaan mewah disita atas pelbagai kesalahan di bawah Akta Pengangkutan Jalan. Katanya, BMW merekodkan sitaan tertinggi dengan 47 kenderaan, diikuti Mercedes-Benz dan lain-lain kenderaan mewah, masing-masing 45 serta 47 unit. “Sebanyak 24 Toyota Alphard dan Vellfire turut disita, manakala Porsche membabitkan 10 sitaan sepanjang tempoh operasi,” katanya dalam sidang media di Ibu Pejabat JPJ Negeri di sini, pada Sabtu. Tambah beliau, majoriti kes yang direkodkan pihaknya adalah membabitkan kegagalan pemilik kenderaan memperbaharui cukai jalan dengan pelbagai alasa...

Wanita maut, tiga cedera dalam kemalangan di WCE

Image
Oleh Ilamparithi   BERUAS - Seorang wanita maut manakala tiga lagi dilaporkan mengalami kecederaan dalam satu nahas jalan raya membabitkan dua kenderaan di Lebuhraya Pesisiran Pantai Barat (WCE), dari arah Kampung Kayan, Sitiawan menghala ke Teluk Intan di sini, Sabtu. Penolong Pengarah Operasi Jabatan Bomba dan Penyelamat Malaysia (JBPM) Perak, Sabarodzi Nor Ahmad berkata, pihaknya menerima maklumat kemalangan berkenaan pada pukul 7.38 pagi. Katanya, sepasukan lapan anggota dari Balai Bomba dan Penyelamat (BBP) Sitiawan diatur gerak ke lokasi kejadian untuk operasi menyelamat. “Kemalangan melibatkan sebuah kereta jenis Perodua Axia dinaiki seorang lelaki dan sebuah kereta Perodua Myvi dinaiki dua wanita dan seorang lelaki orang kurang upaya (OKU). “Pemandu Axia berusia 40-an mengalami kecederaan parah namun telah keluar dari kenderaan manakala pemandu kereta Perodua Myvi berusia 31 tahun pula tersepit di bahagian pemandu,” katanya di sini hari ini. Menurut beliau, ketua operasi ya...

Piala Dunia Sepak Takraw: Malaysia waspada senjata baharu Thailand!

Image
Oleh Ilamparithi   SKUAD sepak takraw negara diingatkan supaya tidak terlalu selesa meskipun bakal beraksi di laman sendiri pada Piala Dunia ISTAF 2026 apabila Thailand dijangka tampil dengan wajah baharu termasuk kehadiran tekong dan killer baharu. Presiden Persatuan Sepak Takraw Malaysia (PSM), Datuk Mohd Sumali Reduan berkata Thailand pasti mahu bangkit selepas kekalahan mereka di gelanggang sendiri sebelum ini, sekali gus menjadikan cabaran kali ini jauh lebih sengit buat skuad negara. “Kita memang sudah menjangka kebangkitan Thailand kerana mereka melakukan persiapan rapi termasuk beberapa rombakan tertentu. Saya rasa perubahan itu akan menjadikan pasukan mereka lebih baik berbanding sebelum ini,” katanya. Menurutnya, barisan kejurulatihan negara sentiasa memantau perkembangan semasa skuad Thailand bagi memastikan pemain negara tidak terkejut dengan corak permainan baharu lawan mereka. “Kita mengikuti perkembangan mereka secara dekat kerana mungkin ada beberapa pemain baharu d...

‘Ma jangan marah, saya nak mati dah’

Image
Oleh Alaiolieditorial  PASIR PUTEH – Seorang kanak-kanak orang kurang upaya (OKU) kategori ketidakupayaan intelektual atau autisme sempat memohon agar ibu tidak memarahinya sebelum maut apabila dia dihempap blok konkrit semasa bermain dan menggali lubang di kawasan pasir di depan rumah di Kampung Dalam Rhu di sini petang semalam. Dalam kejadian kira-kira pukul 2.30 petang itu, mangsa, Mohamad Yusof meninggal dunia di lokasi kejadian manakala bapa saudaranya, Muhamad Yunus Nasir, 12, dihantar ke hospital untuk rawatan lanjut. Ibu kepada Mohamad Yusof, Nurul Anis Abdul Rahman, 36, berkata, sebelum kejadian dia berada di dalam rumah sebelum anak perempuannya, Siti Nur Amyliana, 10, memaklumkan bahawa abangnya dihempap blok konkrit. Menurutnya, dia terus bergegas ke kawasan depan rumahnya sebelum cuba mengangkat sendiri blok konkrit berkenaan, namun gagal kerana binaan tersebut terlalu berat. “Saya sudah tiada cara lain sebelum terus berlari kira-kira 100 meter untuk meminta pertolonga...

அன்னையர் தினத்தை முன்னிட்டு மாபெரும் புடவை அணிவகுப்பு நடை பயணத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டனர்!

Image
சத்யா பிரான்சிஸ் பினாங்கு, ஜார்ஜ் டவுன் மே 9 - அன்னையர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் புடவை அணிவகுப்பு நடைப் பயணத்தில் நூற்றுக்கணக்கானத் தாய்மார்களும் பெண்களும் பங்கு கொண்டது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.  பினாங்கு கெபுன் பூங்கா இளைஞர் வளாகத்தில் ஆரம்பமான  சிறப்புமிகு விழாவை பினாங்கு இந்திய சங்கத்தின் துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுத் தலைவருமான டத்தின் புவனேஸ்வரி ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாய்மார்களோடு இளம் பெண்களும் என 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.  பெண்கள் மத்தியில் உடல் ஆரோக்கியத்தையும்  பாரம்பரிய பண்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம். பினாங்கு பெண்கள் முன்னேற்ற அமைப்பின் தலைவர் ஓங் பெங் லெங்,  பினாங்கு முதலமைச்சர் அலுவலகத்தின் பிரதிநிதி அமுதா கிருஷ்ணன்,  ராம் கர்பால் சிங் பிரதிநிதி டி. விஸ்வநாதன், நியூட்ரி ஆர்ட் குளோபல் சொல்யூஷன் இயக்குனர் ரூபாலி தொங்கிண்மணி, பினாங்கு இந்திய சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். சோமசுந்தரம், டாக்டர் புனிதாவரி, டத்தோஸ்ரீ செல்வகு...

Jumpa kaki, kepala, tangan pemancing hilang - Bomba

Image
Oleh Alaiolieditorial MIRI - Operasi mencari dan menyelamat (SAR) seorang lelaki warga emas yang dilaporkan hilang ketika memancing di Sungai Ridan, Marudi memasuki hari kedua dengan penemuan sebahagian anggota badan mangsa. Jabatan Bomba dan Penyelamat Malaysia (JBPM) Sarawak memaklumkan,  Liew Mei Koon, 64, dipercayai menjadi mangsa serangan buaya. "Pada 10.52 pagi, pasukan SAR menemukan sebahagian anggota badan mangsa iaitu dua kaki, satu kepala dan satu tangan. "Pada 4 petang, operasi pencarian tamat sepenuhnya kerana anggota badan yang lain gagal dijumpai. "Mayat telah diserahkan kepada pihak polis untuk tindakan selanjutnya," menurut sumber JBPM dalam satu kenyataan pada Jumaat. JBPM memaklumkan, mereka menerima panggilan berhubung kehilangan mangsa pada 9.20 semalam, sebelum pasukan daripada Balai Bomba dan Penyelamat (BBP) Marudi digerakkan ke lokasi di Jalan Industri, Sungai Ridan. Adik mangsa melaporkan, lelaki itu hilang selepas motosikal, pakaian dan per...

சிலாங்கூரில் பன்றிகள் வளர்க்க நிரந்தரத் தடை; சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

Image
எஸ்.எஸ்.மணிமாறன் ஷா ஆலம், மே 8 -  சிலாங்கூர் மாநில அளவில் எங்கும் பன்றிகளை வளர்க்கக் கூடாது என்ற நிலையான முடிவில், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ்ஷா அரண்மனை வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கை வழி உத்தரவும் பிறப்பித்துள்ளார்.   பல முறை இது குறித்து தாம் எச்சரிக்கை விடுத்ததுடன் தமது கருத்தில் இன்னமும் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  சுற்றுச் சூழலுக்கு அதிக சேதாரமாக இருப்பதுடன் நீர், நிலம் மற்றும் காற்றுத் தூய்மைக் கேட்டை உருவாக்கக் கூடியதாக இருப்பதால், பன்றிகள் வளர்ப்பை சிலாங்கூர் மாநில அளவில் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை தாம் முன்னெடுத்து செயல்படுத்தியுள்ளதாக சுல்தான் அறிக்கையில் தமது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இதன் இறைச்சியை உண்பதில் ஆர்வம் உடையோர் பன்றி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் சிலாங்கூர் சுல்தான் முன் வைத்துள்ளார்.- Alaiolinews

காலை தொடங்கி இடைவிடாது பெய்த அடைமழையால் சிலாங்கூரில் மோசமான வெள்ளப் பெருக்கு ; கோம்பாக் சாலையில் மரங்கள் சாய்ந்து வாகனங்கள் சேதம்

Image
         எஸ்.எஸ்.மணிமாறன்  கோலாலம்பூர்,  மே 8 -  இன்று காலை நேரத்தில் தொடங்கிய இடைவிடாத அடைமழையால் சிலாங்கூரில் பல சாலைகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் ,  பலமான காற்றினால் சாலையோரங்களில் உள்ள மரங்களும் சாய்ந்து சாலையை அடைத்து கொண்டதோடு சில இடங்களில் அதன் மரக்கிளைகள்  பயணித்து கொண்டிருந்த வாகனங்கள் மீது முறிந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியதால் போக்கு வரத்து நிலை குத்தியது. கோம்பாக் சாலை 10 ஆவது மைலில், பலத்த காற்றினால் சாலையோர மரங்கள் சாய்ந்ததால் சில வாகனங்கள் சேதமுற்றதாக அலை ஒளி ஊடகத்தின் அபிமான வாசகர் அன்பழகன் அலை ஒளி செய்தியாளர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.  வழி நெடுகிலும் சில வாகனங்கள் வெள்ளப் பெருக்கில் சிக்கி அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு அதன் ஓட்டுநர்கள் வாகனங்களை அங்கேயே கைவிட்டு, சிலர் சுயமாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக அவர் தகவல் தெரிவித்தார்.   தீயணைப்பு படை வீரர்களும் களத்தில் இறங்கி வாகனங்கள் மீது முறிந்து கிடந்த மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக அன்பழகன் அலை...

2 wanita digilis kereta api ketika lintas landasan

Image
  By Alaioli Global NEW DELHI – Dua wanita meninggal dunia digilis tren ketika  melintas landasan di sebuah stesen kereta api di negeri Bihar, India, lapor portal berita Must Share News.  Kejadian berlaku sekitar pukul 2.30 petang (waktu tempatan) di Stesen Kereta Api Bakhtiyarpur, baru-baru ini.  Rakaman sistem televisyen litar tertutup (CCTV) dikongsi di media sosial menunjukkan dua wanita terbabit melintas landasan sambil membawa barangan mereka sebelum cuba untuk naik ke platform.  Beberapa orang awam menarik mereka ke atas, manakala sebilangan penumpang menjerit memberi amaran selepas menyedari sebuah kereta api sedang bergerak laju ke arah platform.  Malangnya, kedua-dua wanita itu digilis di antara gerabak kereta api dan platform stesen.  Mangsa dikenal pasti sebagai Intar Devi, 62, dan anak saudaranya, Sangeeta Devi yang berusia 45 tahun.  Laporan tempatan mendedahkan bahawa Intar pergi ke stesen kereta api tersebut untuk menghantar Sangee...

Pelajar kantoi ‘dating’ di sekolah, guru minta putuskan hubungan

Image
  By Alaioliglobal JAKARTA – Seorang guru di Indonesia menerima pujian orang ramai apabila mengarahkan  seorang pelajar lelaki dan perempuan untuk memutuskan hubungan selepas ditangkap ‘dating’ di dalam kawasan sekolah, lapor portal berita Lambe Turah.  Rakaman video dimuat naik di platform TikTok oleh akaun @officiallambeturah menunjukkan pasangan kekasih itu dipanggil ke bilik bimbingan dan kaunseling.  Selain memberikan teguran, guru yang mengendalikan kes itu mengambil tindakan tegas dengan meminta mereka memutuskan hubungan.  Rakaman itu mencatatkan lebih 1.6 juta tontonan dan menimbulkan pelbagai reaksi pengguna media sosial.  “Nak meneruskan hubungan boleh tetapi jangan ‘dating’ di dalam sekolah,” kata seorang netizen.  “Cinta tidak direstui guru,” kata pengguna media sosial lain. - Agensi

கல்வியைப் போல விளையாட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறக்க வேண்டும் - சிவாலெனின்!!

Image
சுங்கை, மே 8 - தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் தனித்துவமாய் சிறந்து விளங்க வேண்டும் என சுங்கை குரூயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர் சிவாலெனின் கோரிக்கை விடுத்தார். அதே வேளையில், தமிழ்ப்பள்ளியில் விளையாட்டில் ஆளுமைக் கொண்டிருக்கும் மாணவர்கள் இடைநிலைப்பள்ளியிலும் அத்துறையில் மிளிர வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார். தமிழ்ப்பள்ளியைப் போல் இடைநிலைப்பள்ளியில் வாய்ப்புகள் நமக்காக காத்திருக்கிறாது என்று நினைவுறுத்திய அவர் வாய்ப்புகளைத் தேடி அதனை தனதாக்கி விளையாட்டுத்துறையிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முத்திரைப் பதிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். சுங்கை குரூயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்து பேசுகையில் சிவாலெனின் இவ்வாறு கூறினார். மேலும்,சுங்கை குரூயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளியாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டி உட்பட இப்பள்ளி முன்னெடுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெருமிதமாகவும் தனித்துவ சிறப்பையும் கொண்டிருப்பதையும் சுட்டிக்காண்பித்து பேசிய அவர் பள்ளி தலைமையாசிரியர்,ஆசிரியர்க...

சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு வெ.15 ஆயிரம் - மண்டபம் சீரமைப்பிற்கு வெ.30 ஆயிரம் டத்தோ சிவநேசன் வழங்கினார்!!

Image
சிவாலெனின் சுங்கை,மே 8- சுங்கை தமிழ்ப்பள்ளியின் நடவடிக்கைகளுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் இவ்வாண்டும் வெ.15 ஆயிரம்  வழங்குவதாகவும் பள்ளியின் சிற்றுண்டிச்சாலை மற்றும் மண்டபத்தை சீரமைத்து மேம்படுத்த வெ.30 ஆயிரத்தை சுங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் ஒதுக்கியிருப்பதாக அவரது சிறப்பு அதிகாரியும் தாப்பா ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜெயகுமார் பாலக்கிருஸ்ணன் தெரிவித்தார். இந்தாண்டு மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் டத்தோ சிவநேசன் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைக்கும் மானியத்தை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் கூறிய ஜெயகுமார் சுங்கை சட்டமன்றத்தை உட்படுத்திய ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியின் நலனிலும் டத்தோ சிவநேசன் அக்கறைக் கொண்டிருப்பதாகவும் மேலும் கூறினார். சுங்கை தமிழ்ப்பள்ளியின் 63வது விளையாட்டுப் போட்டியை டத்தோ சிவநேசனின் பிரதிநிதியாய் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த போது ஜெயகுமார் இதனைத் தெரிவித்தார். மேலும்,பேரா மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் மாநில சுகாதாரம்,மனிதவளம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக டத...

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

Image
சிவாலெனின் பத்து காஜா, மே08- நீண்டக்காலமாக சீரமைக்கப்படாமலும் குண்டும் குழியுமாக இருந்த பத்துகாஜா இந்தியர் இடுகாடு சாலை பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமாரின் ஆக்கப்பூர்வப் பணியால் சீரமைக்கப்பட்டது. சம்மதப்பட்ட இடுகாடு நிர்வாகம் இச்சிக்கலுக்குத் தீர்வுகான நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வும் காணப்பட்டது. இது தொடர்பில் விவரித்த நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் நீண்டக்காலமாக நிலவிய இச்சிக்களுக்கு நிரந்திரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு சாலை புதுப்பிக்கவும் பட்டதாக கூறினார். இச்சாலையை சீரமைத்து புதுப்பிக்க வெ.52 ஆயிரத்து 120 செலவு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக பத்து காஜா நாடாளுமன்றத்தில் மக்களுக்கான உட்கடமைப்பு சார்ந்த விவகாரங்களில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அது தொடர்பிலான பிரச்னைகள் நன்முறையில் கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்வுகளையும் ஏற்படுத்தி வருவதாக சிவகுமார் கூறினார். தொடர்ந்து மக்கள் பணியில் நனிச் சிறந்த சேவை மட்டுமின்றி தீர்வுகளையும் வழங்கி வரும் நாடாளுமன...

சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் சிலாங்கூர் மாநிலம் 54 தங்கங்களை வெல்லும் - அபாஸ் அஸ்மி நம்பிக்கை.

Image
  எஸ்.எஸ்.மணிமாறன்   ஷா ஆலம்  மே 8 -  வரும் 15.8.2026 முதல் 24.8.2026 வரை நடைபெறவிருக்கும் சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் சிலாங்கூர் மாநிலம் 54 தங்கங்களை வென்று முன்னிலையில் இடம் பெறும் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக மாநில விளையாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அபாஸ் அஸ்மி செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.   சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து களத்தில் இறங்கி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருக்கும் போட்டியாளர்களைச் சந்தித்து  ஆலோசனைகளை வழங்கிய பின்னர் அவர் மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.  சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகள் இம்முறை கடுமையாக இருக்கக் கூடும்  என்பதால் மாநில விளையாட்டு வீரர்கள் அதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக அபாஸ் அஸ்மி கூறினார்.- Alaiolinews

மஸ்ஜித் இந்தியா பாதாள சாக்கடையில் விழுந்து மடிந்த விஜயலட்சுமிக்கு இறப்புப் பத்திரம் கிடைத்தது; 8 இலட்சம் ரிங்கிட் கோரி மகன் சூரியா வழக்கு

Image
எஸ்.எஸ்.மணிமாறன் கோலாலம்பூர், மே 8 -  சில வருடங்களுக்கு முன்பு, இங்கு மஸ்ஜித் இந்தியா பகுதியில் சுறறிப் பார்க்க வந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமி என்ற பெண்மணி, காலாற நடந்து கொண்டிருந்த வேளையில் பாதாள சாக்கடையில் வீழ்ந்து  மடிந்து போனார்.  சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகள் மாதக்கணக்கில் தேடியும் விஜயலட்சுமியின் உடல் கிடைக்காமல் போனதால் அவர்கள் தேடும் நடவடிக்கைகளைப் பின்னர் கை விட்டனர்.  இந்தத் துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து இறந்து போன விஜயலட்சுமியின் மகன் எம். சூரியா என்பவர், தாயாரின் இறப்புப் பத்திரத்தைப் பெறுவதற்கு நேரம் காலத்தை செலவழித்து அலையாய் அலைந்து இறுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு  ஒரு வக்கீல் நிறுவனத்தின் உதவியுடன் தாயாரின் இறப்புச் சான்றிதழைப் பெற்றார்.  இறப்புச் சான்றிதழ் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதால், அனுபவம் நிறைந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் மூலம் அரசிடம் 8 இலட்சம் ரிங்கிட் கோரி தாம் வழக்கு பதிவு செய்துள்ளதாக சூரியா இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.   இங்கு தமது தாயாருடன் சுற்றுலா வந்...