கிராஃப் கார் ஓட்டி,மகளை மருத்துவராக்க வாழ்வை அர்ப்பணிக்கும் திருமதி மாலா வெங்கடாச்சலம்

கப்பளா பத்தாஸ் ஜன 14-  தமது மகள் கீர்த்திகா பிரபாகரனை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற வேட்கையில்,தமது குடும்ப வருமானத்துக்காக கிராஃப் கார் ஓட்டும் மாலா வெங்கடாச்சலம் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது.

தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியதுடன் அந்த பணியிலிருந்து திடீர் என ஆட்குறைப்பு காரணமாக தம்மையும் மற்ற பணியாட்களை வேலை நீக்கம் செய்ததாக மாலா வெங்கடாசலம் தெரிவித்தார். 


தொழிற்சாலை பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் குடும்ப வருமானத்துக்கு எதாவது வருமானம் ஈட்ட வேண்டும் என்பதால் கிராஃப் கார் ஓட்டும் பணிக்காக தமது தோழியின் ஆலோசனையின் பேரில் கிராஃப் கார் ஓட்டும் கடைப்பிதழக்கு விண்ணப்பம் செய்ததாகக் கூறிய மாலா, தமது இடது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் கிராஃப் கடப்பிதழ் கிடைக்குமா எனக் கவலையிலிருந்த போது,சில நாட்களுக்குப் பிறகு தமக்கு கிராஃப் ஒட்டுநராக அதன் கடப்பிதழ் கிடைக்கப் போக்குவரத்துக் கழகம் அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு வழிப்பறி கொள்ளையினால் தமது இடது கண் பாதிக்கப்பட்டது அந்த இடது கண் பார்வை இது அவரை பாதிக்கப்பட்டுள்ளது.நன்றாகச் சென்ற தமது வாழ்க்கை தமது கணவரின் மறைவுக்குப் பிறகு மேலும் வாழ்வில் போராடத் தொடங்கியதாகத் தனித்து வாழும் உடல் குறைவுடைய அவர் தெரிவித்தார். 

திருமணம்,சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் பணியையும் மாலா வெங்கடாச்சலம் செய்து வந்துள்ளார்,அலைச்சல் செய்வதும் அவருக்குக் கைகொடுத்ததுடன்,தமது கணவர் கணினித் துறையில் சிறந்து விளங்கி வியாபாரம் செய்ததால் தங்களின் வாழ்க்கை சுமுகமாகச் சென்றது என்றார் அவர். 

கணவரை இழந்தும்,வாழ்வாதாரமாக இருந்த தொழிற்சாலை பணி போனதும் தனது உறவினர்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுக்காமல்,தமது கணவரின் சகோதரர் உதவியுடன் கணவர் வீட்டிலேயே சிறிது தங்கி இருந்ததுடன்,தற்போது கப்பளா பத்தாஸ் கம்போங் கோவில் பகுதியில் தனது தாயாருடன் தற்போது தங்கி வருவதாக மாலா வெங்கடாச்சலம் விவரித்தார். 

கூலிம் இடைநிலைப் பள்ளியில் தமது மகள் கீர்த்திகா பிரபாகரன் ஐந்தாம் படிவத்தில் பயின்று வருகிறார்,மகளின் மருத்துவ படிப்புக்காகத் தன்னை அர்ப்பணித்து கிராஃப் கார் ஓட்ட வருகிறேன் தமது மகள் கீர்த்திகா ஒரு மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தை அடைய வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணிக்கத் தாம் முடிவு செய்துள்ளதுடன்,தமது வாழ்வாராத்துக்கு தாம் முன்பு செய்த சுப காரியங்களுக்கு அலங்காரம் செய்வது,அணிச்சல் ஆகிய சிறு வியாபாரத்தைச் சிறிது முதலீடுதனை சேமித்த பிறகு தொடங்க நம்பிக்கை கொண்டுள்ளதாக மாலா வெங்கடாச்சலம் தெரிவித்தார். 

தனித்து வாழும் தாயாரான மாலா வெங்கடாச்சலத்தின் வாழ்க்கையோ மன்றவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஊட்டும் பாடமாக இருக்கிறது,அவரின் விடா முயற்சியும் வாழ்க்கையின் அர்ப்பணிப்பும் தமது மகளை ஒரு மருத்துவராக ஆக்க வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்படுத்து அதற்காக எவ்வகையான பணியைச் செய்ய முடியுமோ எனத் தீர ஆராய்ந்து அவரின் லட்சிய கனவை அடையவும் வாழ்வில் வெற்றி பெறவும் நாமும் வாழ்த்துவோம்.

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!