வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!
சிவாலெனின்
பத்து காஜா, மே08- நீண்டக்காலமாக சீரமைக்கப்படாமலும் குண்டும் குழியுமாக இருந்த பத்துகாஜா இந்தியர் இடுகாடு சாலை பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமாரின் ஆக்கப்பூர்வப் பணியால் சீரமைக்கப்பட்டது.
சம்மதப்பட்ட இடுகாடு நிர்வாகம் இச்சிக்கலுக்குத் தீர்வுகான நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வும் காணப்பட்டது.
இது தொடர்பில் விவரித்த நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் நீண்டக்காலமாக நிலவிய இச்சிக்களுக்கு நிரந்திரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு சாலை புதுப்பிக்கவும் பட்டதாக கூறினார்.
இச்சாலையை சீரமைத்து புதுப்பிக்க வெ.52 ஆயிரத்து 120 செலவு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக பத்து காஜா நாடாளுமன்றத்தில் மக்களுக்கான உட்கடமைப்பு சார்ந்த விவகாரங்களில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அது தொடர்பிலான பிரச்னைகள் நன்முறையில் கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்வுகளையும் ஏற்படுத்தி வருவதாக சிவகுமார் கூறினார்.
தொடர்ந்து மக்கள் பணியில் நனிச் சிறந்த சேவை மட்டுமின்றி தீர்வுகளையும் வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இடுகாட்டு நிர்வாகம் மட்டுமின்றி பொது மக்களும் நன்றி பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews
.jpeg)
Comments
Post a Comment