மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

எஸ்.எஸ்.மணிமாறன். 

பந்திங். மே 2.  மாநில அளவில் 688 அனுமதியற்ற வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கடந்த 10.2.2026 இல் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ்ஷா அறிக்கை வழி தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்தியும்  சில ஆலய நிர்வாகத்தினர் இந்த அறிவிப்பில் திருப்தியடையாமல் இன்னமும் தொடர்ந் து தம்மை நோக்கித் தர்க்கத்தில் இறங்கியுள்ளதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.   


கடந்த வார சட்ட மன்ற 15 ஆவது கூட்டத் தொடரில் மேற்கண்ட தகவலை அவையில் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் உண்மைக்குப் புறம்பாகச் செயல்படாமல், உண்மையான நிலவரங்களை தாமும் இதை அவையில் தாக்கல் செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். 




மாநில அளவில் எழுந்துள்ள அனுமதியற்ற வழிப்பாட்டுத் தலங்களுக்கு மத்தியில்  தலை வெடித்து விடும் அளவுக்கு, 


அடுத்தக் கட்ட நிலையில், அவரவருக்கு விரும்பான இடங்களில் கட்டப்பட்டு எழுந்துள்ள சிறு கோயில் பிரச்சினைகளுக்கும் இன்னமும் முடிவு காணப் படாமல் இருப்பதோடு, சிலர் அதற்கு தலைவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுய நோக்கத்திற்காகக் கூட இருக்கக் கூடும் என்பதால் அடுத்தவர் நிலத்தில் வழிபாட்டுத் தலங்களை எழுப்பி விட்டு அதற்கு எப்படி எப்போது தீர்வு காணப்படும் என்ற கேள்வியுடன் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.


பந்திங் தாமான் செரி புத்ராவில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அமையப்பெற்ற கூடுதல் சிறப்புகள் போன்று மற்ற ஆலயங்களும் அமையப்பெற்றால் அதனால் எந்த வித இழுப்பறியும் பிரச்சினைகளும் தொடராது என்பதால் மற்ற ஆலய நிர்வாகத்தினரும் இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


முன்னதாக,  தாமான் செரி புத்ரா அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அரசு பிரதிநிதிகள் மற்றும் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட பாப்பா ராய்டுவுக்கு ஆலயக் குருக்கள் சிவ ஸ்ரீ நீலமேகம் பரிவட்டம் கட்டி காளாஞ்சி வழங்க ஆலயத் தலைவர் கே.குமார் அவருக்கு மாலை பொன்னாடை அணிவித்து தமது அன்பைப் புலப்படுத்திக் கொண்டார். பாப்பா ராய்டுவின் துணைவியார் திருமதி மகேஸ்வரிக்கு ஆலயப் பொறுப்பாளர்களில் ஒருவரான திருமதி தங்கம்மாள் மாலை பொன்னாடை அணிவித்து பழக்கூடை வழங்கி கௌரவித்தார்.


தொடர்ந்து, அரசு பிரதிநிதிகள் சிலரும் மாலை பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.. இதனைத் தொடர்ந்து, ஆலய கலாசார மண்டபத்தில் கலைவிழா நிகழ்ச்சிக்கு முன்பாக, நெகாராகூ  தேசிய கீதம் மற்றும் இறை வணக்கத்துடன் குத்து விளக்கு மங்களகரமாக ஏற்றப் பட்ட வைபவத்துடன் தொடங்கப் பட்ட சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் உள்ளூர் கலைஞர்களின் ஆடல் பாடலும் களை கட்டியது. 


சைவ உணவு உபசரிப்புடன் நேர்த்தியாக வழி நடத்தப்பட்ட கலைவிழாவில் பாட்டும் பரதமும் அனைவருக்கும் கண்ணுக்கும் காதுக்கும் இனிமை சேர்த்தது எனலாம்.  சித்திரைப் புத்தாண்டு கலை விழாவையொட்டி நேற்று மலர்ந்த மே தினத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிமாமணி எஸ்.எஸ்.மணிமாறனின் கவிதையை தமது வாழ்த்துச் செய்தி யுடன் வாசித்த பாப்பா ராய்டு , பாட்டாளி மக்கள் அன்று பட்ட பாட்டையும் அதனால் விளைந்த நாட்டின் வளப்பத்தையும் அவர் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.


தொடர்ந்து, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு  பங்குல் மாக்கான் உணவுப் பொருட்களும் பெற்றனர். மாநில அளவில் செயல்படும் வழிப் பாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர் பாப்பா ராய்டு விடம் இருந்து மாநில அரசின் மானியம் பெற்றனர்.  கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் தலைவர் துவான் முகமட் ஹஸ்ரி நோர் முகமட், மாவட்ட ஆட்சியர் புவான் தெங்கு ரோஹானா தெங்கு நவாவி, கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி,  


பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், பாப்பா ராய்டு வின் சிறப்பு அதிகாரி திருமதி காந்திமதி,மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களான நடேசன் சுப்ரமணி இளையராஜா பழனிச்சாமி எலிசா சாம்சன் இமானுவேல், பன்னீர் செல்வம் குப்பன் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் விருந்தினர் என அறுநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அதிர்ஷ்டக்குலுக்கு நிகழ்ச்சியுடன் சித்திரைக் கலை விழா நிறைவு பெற்றது.

Comments

Popular posts from this blog

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!