மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!

டிகே.மூர்த்தி, 

தெலுக் இந்தான், மே 3-சித்திராப் பௌர்ணமி என்றால் தெலுக் இந்தான், தெலுக் இந்தான் என்றால் சித்திராப் பௌர்ணமி என்ற ஆன்மிக அடையாளமிக்க அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் திருவிழா நாடெங்கும் ஒலிக்கச் செய்துள்ளது என்று பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் கூறினார். 



தெலுக் இந்தான் நகரத்தார்களின் முன்னெடுப்பில், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த திருவிழாவில் தமது குடும்பத்துடன் பங்கேற்றிருந்த அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த ஆண்டைக் காட்டிலும், இவ்வாண்டு எல்லாமே நல்ல முறையில் சிறப்பாக நடைபெறுவதற்கு அடிப்படையாக இருக்கும் 190  பேர் மாநில கலகத் தடுப்பு படை வீரர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளின் ஆளுமையினால் இந்த நிமிடம் வரை பொது மக்களிடம் இருந்து புகார் பெறவில்லை என்றால், திருவிழா பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது என அறியப்படுகிறது. அந்நிலையில் பேரா அரசு சார்பில் டத்தோ சிவநேசன் நன்றித் தெரிவித்தார்.  



தவிர, ஊராட்சி மன்ற அதிகாரிகள்,  மாவட்ட நில அலுவலக அதிகாரி மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மலேசிய இந்து சங்கத்தின் தெலுக் இந்தான் பேரவையினருக்கும், ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் மற்றும் அருள்மிகு மணல் மேடு  நிருவாகத்தினருக்கும் டத்தோ சிவநேசன் தனது நன்றியையும், வாழ்த்துகளையும் கூறியதுடன், இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து சேவையாற்றிட ஊக்கம் அளித்துள்ளார். அந்நிலையில், குறு சிறு ஆலயங்கள் குறித்த எழுந்துள்ள விவகாரத்திற்கு  பேரா அரசு தனது தார்மீக ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் என டத்தோ சிவநேசன் மேற்கோள் காட்டிப் பேசினார். 



மேலும், இங்குள்ள (மணல் மேடு) ஜாலான் பண்டார் அருள்மிகு காளியம்மன் கோயில், தெலுக் இந்தான் நகரத்தார்கள் மற்றும் இந்த ஆண்டு தற்காலிக வணிகக் கூடாரங்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் பேரா அரசுக்கு என் மூலமாக மாலை அணிவித்து மரியாதை செய்துள்ள உங்கள் அத்தனைப் பேர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன் என்றார் சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன். 


அடுத்து, இனி வரும் காலங்களில் சித்திராப் பௌர்ணமி தற்காலிக வணிகக் கூடாரங்கள் ஜாலான் செலாட்டிற்கு இடம் பெயர்கிறது. இங்கு பல ஆண்டுகளாக அமைக்கப்படும் தற்காலிக வணிகக் கூடாரங்கள் குறித்த பக்தர்கள், பொது மக்கள், போக்குவரத்துக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி வந்துள்ளது. 


அதே வேளையில், இங்குள்ள மணிக்கூண்டு முழுமையாகவும் வீடமைப்பு ஊராட்சி அமைச்சின் சார்பில் சீரமைக்கப்படவுள்ளது. இதற்கான அவகாசம் என்பது 3 ஆண்டு காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். ஊராட்சி மற்றும் காவல் துறை ஆய்வின்படி  இனிமேல், இந்த தற்காலிக வணிகக் கூடாரங்கள் நிரந்தமாக ஜாலான் செலாட் (OCBC) எதிரில் உள்ள ஊராட்சியின் தளத்தில் குத்தகை வழங்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அழுத்தமாகவும் எடுத்துரைத்தார்.

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!