மோரிப்,டூசுன் டுரியான் திரௌபதி அம்மன் ஆலய 145 ஆவது வருடாந்திர விழாவில் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர்



எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், மே  -  இங்கு, மோரிப் சாலையில்,  தொங்கா சிற்றூரை ஒட்டி அமைந்துள்ள டூசுன் டுரியான் தோட்ட அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் 145 ஆவது வருடாந்திர பூக்குழி உற்சவத் திருவிழாவில் அழைக்கப் பட்ட முக்கிய பிரமுகர்களை ஆலய நிர்வாகத்தினர் வரவேற்று மாலை பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். 


அந்த வகையில், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினரும் கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணித் தலைவியுமான திருமதி உமா நந்தினி ஞானப்பிரகாசம், ஆலய நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டு சிறப்பு செய்யப்பட்டார். 


ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஆலயத் தலைவர் ஆறுமுகத்தின் துணைவியார், உமா நந்தினியைக் கௌரவித்தார்.  அவருடன் கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணியின் துணைத் தலைவி வசந்தியும் கலந்து கொண்டார். 




நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியை ஆலயச் செயலாளர்  பெ.நாகராஜன் நேர்த்தியாக வழி நடத்தினார். 


வரும் 11.5.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி தொடக்கம், பக்தர்கள் மோரிப் கடற்கரைப் பகுதியில் இருந்து பால்குடம் காவடிகள் எடுத்து வந்து ஆலய வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர் என்று ஆலயச் செயலாளர் நாகராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.-Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!