தாய்லாந்திலிருந்து 20 மாடுகளைக் கடத்துவதில் தோல்வி,கடத்தல்காரர் தலைதெறிக்க ஓட்டம்
செய்திகள்: இளம்பரிதி
ரந்தாவ் பஞ்சாங்- நேற்று இங்குள்ள சுங்கை கோலோக்கில் அரச மலேசிய தரை ரானுவப் படை 20 மாடுகளைத் தாய்லாந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரும் முயற்ச்சியை வெற்ற்க்ரமாக முறியடித்தனர்.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் அந்நடவடிக்கையை ராணுவம் முறியடித்ததை அடுத்து அகப்படாமல் இருக்க தலைத்தெறிக்க ஓட்டம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ருசீகரச் சம்பவம் சுங்கை கோலோக் ஆற்று பகுதியில் இகழ்ந்துள்ளது.
சம்பவத்தின்போது மதியம் சுமார் 6.45 மணியளவில் அந்த ஆற்றுப் பகுதியில் இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டிரொன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் துணையுடன் அங்கு 3டன் எடை கொண்ட இசுசு ரக லாரி நடமாட்டத்தை கண்டறிந்துள்ளனர்.
அப்போது 20 மாடுகள் தாய்லாந்து எல்லையிலிருந்து சுங்கை கோலோக் வழியாக நாட்டிற்குள் பதுக்கி கொண்டுவருவதற்கு லாரியில் இருப்பதுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது இதனை தெரிந்துகொண்ட சந்தேகத்துக்குரிய உள்நாட்டு ஆடவன் ஒருவன் லாரியிலிருந்து தப்பித்து தலைதெறிக்க ஓடினான்.
தீவிர பரிசோதனையின் வழி அந்த மாடுகள் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரும் முயற்ச்சி நடந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மாடுகளும் சுமார் ரிம 225,000 பெருமானம் உள்ளவை என அறியப்பட்டுள்ளது.
இக்கால்நடை பிராணிகள் கடத்தல் பரிமுதல் சம்பவம் குறித்து லுபோக் ஸ்தோல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்படுள்ளது.
அந்த அனைத்து மாடுகளும் சுங்கத் துறையிடம் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.-Alaiolinews

Comments
Post a Comment