சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் சிலாங்கூர் மாநிலம் 54 தங்கங்களை வெல்லும் - அபாஸ் அஸ்மி நம்பிக்கை.
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் மே 8 - வரும் 15.8.2026 முதல் 24.8.2026 வரை நடைபெறவிருக்கும் சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் சிலாங்கூர் மாநிலம் 54 தங்கங்களை வென்று முன்னிலையில் இடம் பெறும் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக மாநில விளையாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அபாஸ் அஸ்மி செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து களத்தில் இறங்கி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருக்கும் போட்டியாளர்களைச் சந்தித்து ஆலோசனைகளை வழங்கிய பின்னர் அவர் மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.
சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகள் இம்முறை கடுமையாக இருக்கக் கூடும் என்பதால் மாநில விளையாட்டு வீரர்கள் அதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக அபாஸ் அஸ்மி கூறினார்.- Alaiolinews

Comments
Post a Comment