மஸ்ஜித் இந்தியா பாதாள சாக்கடையில் விழுந்து மடிந்த விஜயலட்சுமிக்கு இறப்புப் பத்திரம் கிடைத்தது; 8 இலட்சம் ரிங்கிட் கோரி மகன் சூரியா வழக்கு




எஸ்.எஸ்.மணிமாறன்

கோலாலம்பூர், மே 8 -  சில வருடங்களுக்கு முன்பு, இங்கு மஸ்ஜித் இந்தியா பகுதியில் சுறறிப் பார்க்க வந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமி என்ற பெண்மணி, காலாற நடந்து கொண்டிருந்த வேளையில் பாதாள சாக்கடையில் வீழ்ந்து  மடிந்து போனார். 


சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகள் மாதக்கணக்கில் தேடியும் விஜயலட்சுமியின் உடல் கிடைக்காமல் போனதால் அவர்கள் தேடும் நடவடிக்கைகளைப் பின்னர் கை விட்டனர். 


இந்தத் துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து இறந்து போன விஜயலட்சுமியின் மகன் எம். சூரியா என்பவர், தாயாரின் இறப்புப் பத்திரத்தைப் பெறுவதற்கு நேரம் காலத்தை செலவழித்து அலையாய் அலைந்து இறுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு  ஒரு வக்கீல் நிறுவனத்தின் உதவியுடன் தாயாரின் இறப்புச் சான்றிதழைப் பெற்றார். 




இறப்புச் சான்றிதழ் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதால், அனுபவம் நிறைந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் மூலம் அரசிடம் 8 இலட்சம் ரிங்கிட் கோரி தாம் வழக்கு பதிவு செய்துள்ளதாக சூரியா இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.  


இங்கு தமது தாயாருடன் சுற்றுலா வந்த இடத்தில் தாயைப் பறி கொடுத்து பல இன்னல்களை அனுபவித்து,  சொந்த ஊரில் வேலையை இழந்து, பல தடவை அங்குமிங்கும் அலைந்து திரிந்து அவதிப்பட்ட காரணத்தால் அதற்கான நஷ்ட ஈடாக இந்தக் கோரிக்கையை மலேசிய அரசிடம் வக்கீல் மூலம் வைத்திருப்பதாக கலங்கிய கண்களுடன் சூரியா இவ்வாறு கூறினார்.


மஸ்ஜித் இந்தியா பாதாள சாக்கடையில் தாயார் விழுந்து மடிந்த பகுதியில் தாம் நடந்து செல்லும் போதெல்லாம், தாங்க முடியாத துயரம் கண்ணீரை வரவழைத்து விடுகிறது என்று சூரியா தமது ஆதங்கத்தை இங்கு பதிவு செய்தார்.-Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!