தெலுக் இந்தான் சித்திராப் பௌர்ணமிக்கு இவ்வளவு சிறப்பா...! கொளுத்தும் கோடை வெப்பத்திலும் பக்தர்கள் கூட்டம்..!
டிகே.மூர்த்தி, தெலுக் இந்தான், மே 3
சித்திரை மாதம் என்றாலே முக்கியமாக இங்குள்ள நகரத்தார்களின் அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சித்திராப் பௌர்ணமி திருவிழா கடந்த 129 ஆண்டுகளாக, நாடறிந்த பக்திப் பரவசமூட்டும் கோயில் சித்திராப் பௌர்ணமி என்பதாகும்.
ஏன் சித்திராப் பௌர்ணமி இத்தனை சிறப்பாகவும் நடத்தப்படுகிறது என்றால், தமிழ் நாட்டின் பழனி மலை கோயில் மூலவர் ஸ்ரீ தெண்டாயுதபாணி உருவம் போன்று தெலுக் இந்தானிலும், தெண்டாயுதத்தை கையில் ஏந்தி, தலைமுடியை சிரைத்து, கோவணம் மட்டும் அணிந்த ஆண்டி கோலத்தில், ஞானப்பழமாகவும் அருள்பாலிக்கிறார் என்றும் நகரத்தார் கூறுகின்றனர். இவ்வாண்டு
ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு பல விசேடங்கள் செய்தாலும், சித்திராப் பௌர்ணமி திருவிழா தனிச் சிறப்பிடம் பெற்றுள்ளது. இன்று (01.05.2026) விடியற்காலை 4.00 மணிக்கு கோயில் கதவு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடிகள் ஏந்தியும் முருகனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
பாலபிஷேகம் செய்யும்போது சுமார் 3 மணி நேரம் வரை மூலவர் ஸ்ரீ தெண்டாயுதபாணி தனது திருவுருவத்தை பாலால் காட்சி அளித்தார். மேலும், இவ்வாண்டு மயில் காவடிகள் அதிகமாகப் பார்க்கப்பட்டன. கொளுத்தும் கோடை வெப்பத்திலும் பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இரட்டிப்பாகவும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment