கோயில் நுழை வாசலில் குவிந்து கிடக்கும் காலணிகள் ; பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன..!

டிகே.மூர்த்தி,

தெலுக் இந்தான், மே 4-சித்திராப் பௌர்ணமிக்கு கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்கும் பொருட்டு, கோவில் அருகில், சாலையோரத்தில் அதற்கென்று கட்டணமின்றி இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, சேவையின் அடிப்படையில் காலணிகளை பாதுகாப்பதற்கு தன்னார்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் குறைந்த பட்சம் மூன்று நாள்களுக்கு காலணிகள் பாதுகாப்பை  தொடர்ந்திருக்க வேண்டும். கோயிலுக்கு சென்றவர்கள் மீண்டு வெளியே வரும்போது அவர்களுடைய காலணிகளை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். அதுதான் நடைமுறை சாத்தியமும்கூட என்பதை அனைவரும் அறிந்த விடயம். ஆனால், நடந்தது என்னவெனில், முதல் நாள் திருவிழாவோடு முடித்துகொண்டு அவசர அவசரமாகச் சென்ற கூடாரத்தின்  பொறுப்பாளர் மறுநாள் அக்கூடாரத்தில் அவர் காணவில்லை. ஆனால் கூடாரம் அங்கேதான் இருந்துள்ளது. 


மாற்றாக அத்தற்காலிகக் கூடாரத்தில் வெளியூர் துணி வியாபாரியொருவர் வணிகம் செய்துள்ளார். அந்நிலையில், கோயிலுக்கு செல்லும்போது காலணியை வெளியே வைத்துவிட்டு செல்வதுதான் நம் இந்து மதம் மற்றும் கோயிலின் புனிதத்தன்மைக்கு எடுத்துகாட்டு என்பதை மறுக்க முடியாது. அத்தகைய நிலையில், காலணிகளை பாதுகாக்கும் கூடாரத்தை துணி வியாபாரிக்கு வழங்கியது யாராக இருந்தாலும் கண்டிக்கபட வேண்டும் என்றும் பொது மக்கள் மத்தியில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!