மருத்துவ முகாம்களில் இந்தியர்களின் வருகை ஆரோக்கியமாக இல்லை - டத்தோ சிவநேசன் வருத்தம்!!



பீடோர், மே 9- பொது மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் சுகாதார நிகழ்ச்சிகள்,மருத்துவ முகாம்களில் இந்தியர்களின் வருகை வருத்தம் அளிப்பதாக பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தனது கவலையை வெளிப்படுத்தினார்.


மலாய்காரர்களும் சீனர்களும் தங்களின் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் காட்டும் அக்கறை மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்வு இந்தியர்களிடையே இன்னமும் ஏமாற்றம் அளிக்கும் நிலையில் இருப்பது வருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.



பீடோர் டேவான் முகிபாவில் நடைபெற்ற காது,மூக்கு மற்றும் தொண்டைக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமைத் தொடக்கி வைத்து பேசிய பின்னர் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இதனைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இன்றைய நிலையில் தனிமனித ஆரோக்கியம் அவசியமானது.ஒவ்வொருவரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவுறுத்திய அவர் பீடோர்,சுங்கை மற்றும் தாப்பா வாழ் மக்களுக்காக இந்த சுகாதார முகாமை ஏற்பாடு செய்த்ததாகவும் கூறினார்.



பொதுவாக இரத்ததானம்,நீரழிநோய்,இரத்த அழுத்தம் என பொதுவான சுகாதார முகாம்கள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் காது,மூக்கு மற்றும் தொண்டை குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே கொண்டு செல்லவும் அதுசார்ந்த பரிசோதனைகளை இலவசமாய் மேற்கொள்ளவும் தான் பீடோரில் இம்முறை இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்ததாகவும் அதற்காக மாநில அரசாங்கன் வாயிலாக வெ.23 ஆயிரம் மானியம் ஒதுக்கப்பட்டதாகவும் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.


மேலும்,உலக சுகாதார அமைப்பின் புள்ளியல் விவரத்தின் அடிப்படையில்  2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சராசரியாக உலகில் கேட்கும் திறன் சிக்கலை எதிர்நோக்கியிருப்பதாகவும் கூறிய டத்தோ சிவநேசன் மலேசியாவில் கடந்த 2024இல் சுமார் 68 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருவிலேயே 803 குழந்தைகளுக்கு அச்சிக்கல் இருந்துள்ளதாகவும் சுட்டிக்காண்பித்தார்.




அதே வேளையில்,பேரா மாநிலத்தில் கடந்த 2025இல் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் பொது மருத்துவமனை உட்பட அனைத்து பொது மருத்துவமனைகளில் 90 விழுகாடு பரிசோதனையை குழந்தைகளுக்கு காது சார்ந்த சிக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் தனதுரையில் குறிப்பிட்டார்.


மேலும் இவ்வாண்டும் அனைத்து மருத்துவமனைகளிலும் அப்பரிசோதனைகள் தொடர்வதாகவும் கூறிய டத்தோ சிவநேசன் பெரியவர்கள் மட்டுமின்றி பிறந்த குழந்தை தொடங்கி எல்லா வயது தரப்பினரும் காது,மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமென்றார்.


முன்னதாக இந்நிகழ்ச்சி குறித்து கருத்துரைத்த இது சார்ந்த நிபுணத்துவவாதியான டத்தோ டாக்டர் பிலிஃப் இராஜன் பொது மக்களிடையே காது,மூக்கு மற்றும் தொண்டை சார்ந்த சுகாதார விழிப்புணர்வு மிகக் குறைவாக இருப்பதாகவும் அதனை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தான் தொடர்ந்து இம்மாதிரியான இலவச மருத்துவ முகாம்களை முன்னெடுப்பதாகவும் கூறினார்.


அவ்வகையில், எங்களின் இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு டத்தோ சிவநேசனின் பங்களிப்பு நிறைவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதாகவும் கூறினார்.


மேலும்,நம்மில் பலர் காது,மூக்கு மற்றும் தொண்டை விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை.





பிரச்னையைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முன்வருவதில்லை என்றும் கூறிய அவர் பொது மக்கள் தத்தம் வட்டாரங்களிலுள்ள அரசு பொது மருத்துவமனைகளில் பரிசோதனைச் செய்து கொள்வது அவசியமென்றும் நினைவுறுத்தினார்.


நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொது மக்களுடன் மாநில சுகாதார துணை இயக்குநர் டாக்டர் முகமாட் நஜிப் பின் அட்னான், டத்தோ டாக்டர் பிலிஃப் இராஜன் டாக்டர் மீனாட்சி உட்பட ஈப்போ இராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை மருத்துவர்கள்,அதுசார்ந்த பணியாளர்களுடன் வட்டார ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கிராமத்து தலைவர்கள் என பலரும் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!