மஸ்ஜித் இந்தியா பாதாள சாக்கடையில் வீழ்ந்து மடிந்த விஜயலட்சுமியின் நீதிமன்ற முடிவை ஏற்கிறேன்- ஹன்னா இயோ அறிவிப்பு
எஸ்.எஸ்.மணிமாறன்
கோலாலம்பூர், மே 9 - சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமி, இங்கு தலைநகரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பகுதியில் பொருட்கள் வாங்க வந்த நேரத்தில், எதிர்பாராமல் பாதாள சாக்கடையில் வீழ்ந்து மடிந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசின் அதிகாரிகள் பலரும் மாதக்கணக்கில் தேடல் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் உடல் கிடைக்காமல் போனதால் அதை பின்னர் கை விட்டனர்.
இறந்து போன விஜயலட்சுமியின் மகன் எம்.சூரியா என்பவர், வழக்குரைஞர் பார்த்திபன் மூலம் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் இறப்புச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால், அதை வைத்து வழக்கு சார்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் புவான் ஹன்னா இயோ, வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்றம் வழங்க விருக்கும் தீர்ப்பு முடிவுகளை தாம் ஏற்றுக் கொள்வதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கொண்ட அறிவிப்பை வெளியிட்டார்.-Alaiolinews
.jpeg)
Comments
Post a Comment