வளமான வாழ்க்கைக்கு கல்வி ஒன்றே மாணவர்கள் எதிர்கால வசந்தத்திற்கான மூலதனம். பாப்பா ராய்டு அறிவுறுத்து
எஸ்.எஸ்.மணிமாறன்.
ஷா ஆலம் மே 4 கடந்த 2025 இல் எஸ்பிஎம் தேர்வெழுதிக் காத்திருந்த வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பூர்வக்குடி மாணவர்கள் இவ்வாண்டில் அதன் முடிவுகளை சிறப்பாகப் பெற்றதனால், அவர்கள் உயர்கல்விக் கூடங்களை நோக்கிப் படையெடுக்கும் வேளையில், அவர்களின் தேவையறிந்து கல்வி உதவி நிதியை முன்னெடுத்து தாம் வழங்கி வாழ்த்தியதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

வளமான வாழ்க்கைக்கு கல்வி ஒன்றே எதிர்கால வசந்தத்திற்கான மூலதனம் என்பதால், கல்வி கற்கும் வயதில் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பி 40 பிரிவின் கீழ் உள்ள பூர்வக் குடி மாணவர்கள் அனைவரும் வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே மாநில அரசு செயலகத்தின் எதிர் பார்ப்பாகும்

என்று இங்கு நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து அதற்கான நிதியை மாணவர்களிடம் எடுத்து வழங்கியதோடு , பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

தேர்ந்த கல்வியில் சார்ந்திருக்கும் மாணவர்கள் கருத்துடனும் சிறப்புடனும் கல்வியில் உயர வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்று பாப்பா ராய்டு விவரித்தார். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டிருந்த பூர்வக்குடி மாணவர்கள் அவரிடம் இருந்து கல்வி நிதியைப் பெற்றுக் கொண்டனர்.
Comments
Post a Comment