சிலாங்கூர் சாரிங்கான் கெசிஹாத்தான் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று உடல்நலம் பேணுவீர்- பாப்பா ராய்டு
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், மே 6 - சிலாங்கூர் சாரிங் கெசிஹாத்தான் இலவச மருத்துவ முகாம் வரும் 16.5.2026 சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை பந்திங் தெலுக் டத்தோ டேவான் ஸ்ரீ ஜூக்ரா சமூக மண்டபத்தில் நடைபெற விருப்பதால், இவ்வட்டாரத்தில் ஆரோக்கியம் குறைந்த மனிதர்கள், உடல் நலத்தைப் பரிசோதனை செய்ய நாட்டம் உள்ளவர்கள் திரளாக வருகை தந்து மருத்துவ முகாமில் பங்கேற்கும்படி மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய், கண், காது ,பல் பரிசோதனை என பல்வேறு மருத்துவ ப் பரிசோதனைகள் இலவசமாக மேற் கொள்ள விருப்பதால் தொகுதி வாக்காளர்கள் அவர்தம் குடும்பத்தினர் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும்படி பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
மாநில பொதுநலச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் புவான் ஜாமாலியா ஜாமாலுடின் சிறப்பு அழைப்பாளராக மருத்துவ முகாமில் பங்கேற்க வருகை தரவிருக்கிறார் என்று அவர் தகவல் தெரிவித்தார்.-Alaiolinews

Comments
Post a Comment