சிலாங்கூரில் பன்றிகள் வளர்க்க நிரந்தரத் தடை; சிலாங்கூர் சுல்தான் உத்தரவு



எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம், மே 8 -  சிலாங்கூர் மாநில அளவில் எங்கும் பன்றிகளை வளர்க்கக் கூடாது என்ற நிலையான முடிவில், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ்ஷா அரண்மனை வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கை வழி உத்தரவும் பிறப்பித்துள்ளார்.  


பல முறை இது குறித்து தாம் எச்சரிக்கை விடுத்ததுடன் தமது கருத்தில் இன்னமும் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 


சுற்றுச் சூழலுக்கு அதிக சேதாரமாக இருப்பதுடன் நீர், நிலம் மற்றும் காற்றுத் தூய்மைக் கேட்டை உருவாக்கக் கூடியதாக இருப்பதால், பன்றிகள் வளர்ப்பை சிலாங்கூர் மாநில அளவில் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை தாம் முன்னெடுத்து செயல்படுத்தியுள்ளதாக சுல்தான் அறிக்கையில் தமது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


இதன் இறைச்சியை உண்பதில் ஆர்வம் உடையோர் பன்றி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் சிலாங்கூர் சுல்தான் முன் வைத்துள்ளார்.- Alaiolinews


Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!