உழைப்பாளர் உன்னத சேவைக்கு தாள் பணிவோம்= பாப்பா ராய்டு நெகிழ்ச்சி. எஸ்.எஸ்.மணிமாறன்

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம் மே 1-மே தினத்தை நினைவு கூரும் வகையில், உழைப்பாளர்களின் உன்னத சேவையை, அர்ப்பணிப்பை, தியாகத்தை எண்ணில் அடங்கா பெருமைகளை எண்ணி எண்ணி அவருக்கு நன்றி சொல்லும் விதமாக கை கூப்பி தாள் பணிந்து வாழ்த்தும் சொல்வோம் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தமது மேதின வாழ்த்துச் செய்தியில் மிகுந்த நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.  


அடர்ந்த காட்டுக்குள் பிரவேசித்து, நெளிந்தோடும் கொடிய பாம்புகளை பாய்ந்து வரும் விலங்குகளைக் கண்டும் பயம் கொள்ளாமல் துணிச்சலுடன் முன்னேறி அடர்ந்த காடுகளை வெட்டி, தடையாக இருந்த மலை மேடுகளைக் குடைந்து, பசுமையான இடமாகி பசும் சோலை ஆக்கி, ரப்பர் கன்றுகளை நட்டு நாட்டின் முதுகெலும்பாக அல்லும் பகலும் பாடுபட்டு வளம் கொழிக்கும் நாடாக உருவாக்கிய பாட்டாளி மக்களின் உழைப்பை மதித்து,  அவர்களின் நல்வாழ்வுக்கு நாம் என்றும் துணை நிற்போம் என்று  தமது எண்ண அலைகளை அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.  


நாட்டுக்கு முதுகெலும்பு மட்டும் இன்றி, நனி சிறந்த நாடாக கனி வளம் நிறைந்த வசந்தப் பூங்காவாக மாற்றி அமைத்து தந்த தொழிலாளர்கள் சேவைகளை என்றும் மறக்காது  பாட்டாளி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தாம் இந்த இனிய நாளில் அன்பையும் வாழ்த்தையும் பாராட்டையும் பகிர்ந்து கொள்வதாக பாப்பா ராய்டு தமது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!