விசில் அடித்ததினால் வெற்றியை நோக்கிப் பயணித்து நல்லாட்சி அமைக்க விருக்கும் தவெக தலைவர் விஜய்யின் அமோக வெற்றிக்கு நிறைவான வாழ்த்துகள்! பாப்பா ராய்டு பாராட்டு


 

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம்  மே 5 -  அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று வாகைச் சூடியுள்ள  நடிகரும், தவெக புதிய கட்சியின் தலைவருமான விஜய்யின் அபரிமிதமான சாதனையை அறிந்து, அவருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.  


விசில் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, மற்றவர்கள் பலரை வீழ்த்தி, வெற்றி வாகைச் சூடி தமிழகத்தில் பலரும் உலக மக்களும் எதிர் பார்த்து காத்திருக்கும் புத்தாட்சியை அமைக்க விருக்கும் நாளைய முதல்வர் விஜய், ஏழை எளிய மக்களுக்கும் முதியோருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தபடி நியாயமான முறையில் தேவைகளைப் பூர்த்தி செய்து சிறந்ததொரு முன்மாதிரியாக,  அத்தாட்சியாக பதவியில் அமர்ந்து சேவைகளை நன்கு தொடர வேண்டும் என்று தாம் இந்த இனிய வேளையில் மனம் திறந்து வாழ்த்துவதாக பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளியிடம் தெரிவித்தார். 


விசில் ஊதியவுடன் தயார் நிலையில் மைதானத்தில் ஓட காத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் போன்று, தவெக புதிய கட்சியின் மூலம் இளைஞர் விஜய் சுறுசுறுப்பாக தொடர்ந்து முன்னேறி மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பாப்பா ராய்டு தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.-Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!