நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதா - எதிர்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!!சந்திரசேகரன் கோரிக்கை!




By Siva Lenin

ஜொகூர்,மே07: ஜொகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் நாளைக்  கொண்டு வரப்படவிருக்கும் நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவிற்கு எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் வலுவான எதிர்ப்பினை முன் வைக்க வேண்டும் என 

அரசியல் ஆய்வாளர் திரு.சந்திரசேகரன் கோரிக்கை விடுத்தார்.


சட்டமன்றத்தில் ஐந்து நியமன சட்டமன்ற உறுப்பினர்களை  நியமிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா (RUU) நாளை தாக்கல் செய்யப்படும் நிலையில் அதனை ஏற்காத எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு 

மலேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் (MUDA) தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அசீஸ் முன் வைத்த கோரிக்கையை வரவேற்பதாகவும் ஜொகூர் பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் மலாய்க்காரர் அல்லாத பிரிவின் உச்சமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


மேலும், நியமன சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரம் இன்னும் தெளிவற்றதாக இருப்பதுடன், அது மேலும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்பது குறித்த

புத்ரி வாங்சா சட்டமன்ற உறுப்பினர் அமீராவின் 

 இத்தகைய கொள்கை தொடர்பான முடிவுகள் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும், குறிப்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட வேண்டும் என்றும் சந்திரசேகரன் கேட்டு கொண்டார்.


“அந்த மசோதா தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டாலும், அது உண்மையில் தேவைகளை பூர்த்தி செய்கிறதா மற்றும் எதிர்காலத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை உறுதி செய்ய மறுபரிசீலனை நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

“மாநில அரசு அல்லது எதிர்காலத்தில் ஆட்சியை அமைக்கும் எந்தக் கட்சியும், இந்த முன்மொழிவை மேம்படுத்த அனைத்து தரப்பினருடனும் மீண்டும் கலந்துரையாட வேண்டும்,” என்று அவர் கூறினார்.


இன்று இங்குள்ள கோத்தா இஸ்கந்தரில் அமைந்துள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டமன்ற கூட்டத்தின்போது அமீரா இவ்வாறு கூறினார் என்பதையும் சந்திரசேகரன் நினைவுக்கூர்ந்தார்.


இந்த நிகழ்ச்சியில் ஜொகூர் பெர்சத்து மாநில தலைமை அமைப்பின் தலைவர் டத்துக் டாக்டர் சஹ்ருடின் ஜமால், ஜொகூர் பெர்சத்து ஆர்மடா தலைவர் அலியாஸ் ரச்மான் மற்றும் ஜொகூர் பெர்சத்து தகவல் பிரிவு தலைவர் ஷாஃபிக் அசீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மூடா சட்டமன்ற உறுப்பினர் அமீராவின் கருத்துரை தெளிவான ஒன்றாக அமைந்துள்ளதோடு இந்த மசோதாவை நடப்பு,எதிர்காலம் என எல்லா நிலையிலும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!