வெட்டுக்காயங்களுடன் வீட்டினுள் மூதாட்டியின் சடலம்!




By Ilamparithi

ஈப்போ- இங்குள்ள தாமான் டேசா அமானில் ஓர் வீட்டினுள் பெண் மூதாட்டி ஒருவர் உடலில் பல வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது சுற்றுவட்டார மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சுமார் 70 வயது மதிக்கத்தக்க அம்மூதாட்டியின் சடலம் குறித்த சம்பவம் தொடர்பாக காவல் துறை திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு தகவல் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.


தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து அங்கே மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில் மூதாட்டியின் உடல் தலை கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்கள் பதிந்துள்ளதாக ஈப்போ மாவட்ட காவல் துறையின் உதவி ஆணையர் முகமட் நஜிப் ஹம்சா உறுதிப்படுத்தினார்.


மேலும் தொடர் பரிசோதனையின் வழி அவ்விடத்தில் போலிசார் சம்பவத்தன்று குற்றவாலியால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அரிவால் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.


" இந்த சம்பவம் குறித்து அம்மூதாட்டியின் பிள்ளையே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.தற்போது சம்பவம் நிகழ்ந்த உண்மையான நேரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


"இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் சம்பவம் சுமார் மதியம் 4.45 மணியிலிருந்து இரவு 10 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்திருக்கலாம், அதாவது மூதாட்டி கொலை செய்யப்படுவதற்கு முன் இறுதியாக வீட்டிலிருந்து வெளியேறியதை கண்டிருக்கின்றனர், என்று அவர் கூறினார்.


இதனிடையே காவல் துறை சந்தேகத்தின் பேரில் அண்டை வீட்டிலுள்ள. 52வயது உள்நாட்டு ஆடவர் ஒருவரை விசாரணைக்காக கைது செய்துள்ளது.


மேலும் முதற்கட்ட விசாரணையில் அந்நபர் ஏற்கனவே கடந்த பிப்ரவரி முதல் ஊலு கிந்தாவிலுள்ள பஹாகியா மருத்துவமனையில் மனநோய் சிகிச்சை பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.


கொலைக்கான காரணத்தை போலிசார் பல கோணங்களில்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தற்போது அம்மூதாட்டியின் சடலம் உடற்கூறு சவப் பரிசோதனைக்காக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுள்ளது.-Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!