காலை தொடங்கி இடைவிடாது பெய்த அடைமழையால் சிலாங்கூரில் மோசமான வெள்ளப் பெருக்கு ; கோம்பாக் சாலையில் மரங்கள் சாய்ந்து வாகனங்கள் சேதம்

        



எஸ்.எஸ்.மணிமாறன் 

கோலாலம்பூர்,  மே 8 -  இன்று காலை நேரத்தில் தொடங்கிய இடைவிடாத அடைமழையால் சிலாங்கூரில் பல சாலைகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் ,  பலமான காற்றினால் சாலையோரங்களில் உள்ள மரங்களும் சாய்ந்து சாலையை அடைத்து கொண்டதோடு சில இடங்களில் அதன் மரக்கிளைகள்  பயணித்து கொண்டிருந்த வாகனங்கள் மீது முறிந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியதால் போக்கு வரத்து நிலை குத்தியது.

கோம்பாக் சாலை 10 ஆவது மைலில், பலத்த காற்றினால் சாலையோர மரங்கள் சாய்ந்ததால் சில வாகனங்கள் சேதமுற்றதாக அலை ஒளி ஊடகத்தின் அபிமான வாசகர் அன்பழகன் அலை ஒளி செய்தியாளர் கவனத்திற்கு கொண்டு வந்தார். 




வழி நெடுகிலும் சில வாகனங்கள் வெள்ளப் பெருக்கில் சிக்கி அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு அதன் ஓட்டுநர்கள் வாகனங்களை அங்கேயே கைவிட்டு, சிலர் சுயமாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக அவர் தகவல் தெரிவித்தார்.  




தீயணைப்பு படை வீரர்களும் களத்தில் இறங்கி வாகனங்கள் மீது முறிந்து கிடந்த மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக அன்பழகன் அலை ஒளியிடம் கூறினார்.-Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!