பள்ளி வளாகத்தில் நிகழ்ந்து வரும் வாகன மோதலில் பலியாகும் மாணவர்கள் துயர்ச் சம்பங்கள் தொடர்கதையா, கல்வி அமைச்சின் முறையான விசாரணை தேவை!



எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம்,  மே 6- நாட்டில் உள்ள பள்ளி வளாகங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வரும்  தொடர் வாகன மோதல் விபத்துகளும் அதனால் சிறு வயது மாணவர்கள் மோதுண்டு தூக்கியெறியப்பட்ட நிலையில் இறந்து போகும் அசம்பா விதங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியாக களத்தில் இறங்கி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து தக்க விளக்கத்தை பொது மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.  

அதே வேளையில்,  பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் அப்பள்ளி நிர்வாகத்தினர், பாதுகாவலர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பொறுப்புள்ள ஆசிரியர்கள் அங்கு என்னதான் செய்து கொண்டிருந்தனர் என்பதையும் விலாவாரியாக தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் தமது வேண்டுகோளை முன் வைத்தார்.  



பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல க் காத்திருந்த ஒரு மாணவரை வாகனத்தில் மோதி அநியாயமாக உயிர் போகும் அளவுக்கு செயல் பட்ட ஆசிரியருக்கு காவல் துறையினர் அவரை அழைத்து விசாரித்து நிச்சயம் தக்க தண்டனை வழங்க வேண்டும். 

மேலும், எதிர்கால கனவுகளுடன் பள்ளியில் கல்வி கற்க வந்து, பள்ளி வளாகத்தில் காத்திருந்த வேளையில், நிகழ்ந்த துயரச் சம்பவத்தின் காரணமாக உயிரிழந்த மாணவரின் இறப்புக்கு கல்வி அமைச்சு என்ன விளக்கம் தரப் போகிறது என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். 

சம்பந்தப்பட்ட பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இது குறித்து தீர ஆய்வு செய்து, பள்ளி வளாகத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று அவர் ஆலோசனை விடுத்தார்.  

பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் போதுமானதாக இருப்பதையும் கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்றும் , பள்ளி வளாகத்தில் இது போன்ற சோக நிகழ்வுகள் தொடராமல் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாப்பா ராய்டு தமது கருத்தை முன் வைத்துப் பேசினார்.-Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!