ஜொகூர் மாநில மஇக இளைஞர் பிரிவு தலைவரின் கூற்று உண்மையா?சந்திர சேகரன் கேள்வி?
ஜொகூர்,மே03: நாட்டின் எதிர்கால தூண்களாகவும், அடுத்த தலைமுறைக்கான மனித வளமாகவும் விளங்கவிருக்கும் இளைஞர்கள், குறிப்பாக இந்திய இளைஞர்கள், நாட்டின் நிலைமைகளை தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் திரு. சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், ஜொகூர் மாநில மஇக இளைஞர் பிரிவு தலைவர் திரு. மோகன் அருணாசலம், டத்தோ ஓன் ஹபீஸ் தலைமையிலான ஜொகூர் மாநில அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு பல மேம்பாட்டு திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், அதனால் மாநில மஇக இளைஞர் பிரிவு அவரை ஆதரிக்கிறது என்றும் வெளியிட்ட அறிக்கை தமக்கு ஆச்சரியத்தை எமற்றமும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் மாநில அரசாங்கம் தற்போது ஒரு கூட்டு அரசாங்கமாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு, மத்தியத்தில் தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹரப்பான் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைத்ததால், அதே போன்று ஜொகூர் மாநிலத்திலும் இந்த கூட்டணி அமைப்பு நடைமுறைக்கு வந்தது.
இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய பக்காத்தான் ஹரப்பான், தேசிய முன்னணிக்கு எதிராக முழுமையாக செயல்படாமல், சமநிலையை பேண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், திரு. மோகன் அருணாசலம் குறிப்பிட்டுள்ள மேம்பாட்டு திட்டங்கள் என்ன? அவற்றில் எத்தனை இந்திய இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர்? என்பதனை விளக்கமாக பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
குறிப்பாக அடிக்கடி ஏற்படும் நீர் விநியோகத் தடைகள், இஸ்கந்தார் புத்திரி பூலாய் – ஸ்கூடாய் பூலாய் ஜெயா பகுதிகளில் நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதால், தேசிய முன்னணி அரசாங்கம் தனது செயல்திறனில் தோல்வியடைந்துள்ளதாக அமனா கட்சி குற்றம் சாட்டுகிறது.
மேலும், இன்றைய தலைமுறையின் ததற்மிக பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை மறந்து, கருத்து என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பது சரியல்ல என முன்னாள் பொக்கோ சட்டமன்ற வேட்பாளரும், அரசியல் ஆய்வாளரும்மான திரு. சந்திர சேகரன் ஆறுமுகம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

Comments
Post a Comment