கடுமையான மழையைத் தொடர்ந்து கூட்டரசு நெடுஞ்சாலை வெள்ளக் காடானது!
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் , மே 7 - இன்று பிற்பகலில் இடைவிடாது பெய்த கனமான மழையைத் தொடர்ந்து கூட்டரசு நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பல இடங்கள் வெள்ளக் காடானது.
ஷா ஆலம், கிள்ளான் பள்ளத்தாக்கு, பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் பல இடங்களில் கனத்த மழையின் காரணமாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வாகனமோட்டிகள் பலரும் சிரமத்தை எதிர் நோக்கியதோடு, சிலர் சாலையில் முன்னேறிச் செல்ல முடியாமல் தங்களது வாகனங்களை சாலை நெடுகிலும் நிறுத்தி வைத்து அவதிக்குள்ளானதாக அலை ஒளி ஊடக அபிமான வாசகர் அன்பழகன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
கனமான மழைக் காலங்களில் கூட்டரசு நெடுஞ்சாலையில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் சம்பந்தப்பட்ட வடிகால் நீர் பாசன இலாகா அதிகாரிகள் இனியும் கால தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும் என்று அன்பழகன் தமது கருத்தை வெளியிட்டார்.
மழைக் காலங்களில் கூட்டரசு நெடுஞ்சாலையில் தொடரும் வெள்ளப் பெருக்குப் பிரச்சினைக்கு அலட்சியம் காட்டாமல் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும் என்று அலை ஒளி ஊடகம் தமது வேண்டுகோளை முன் வைக்கிறது.- Alaiolinews

.jpeg)
.jpeg)
Comments
Post a Comment