ஆரோக்கியம் குறைந்தவருக்கும், ஆர்வத்துடன் கல்வி யைத் தொடர்வோருக்கும் பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையம் கை கொடுத்து உதவுகிறது.பாப்பா ராய்டு தகவல்.
எஸ்.எஸ்.மணிமாறன்.
பந்திங் மே 4. மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஆரோக்கியம் குறைந்த நிலையில் கவலையில் ஆழ்த்தியிருக்கும் முதியவருக்கும், தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்றும் உயர் கல்விக் கூடங்களை நோக்கிப் பயணிக்க சிரமத்தை எதிர் நோக்கி வரும் பி 40 பிரிவின் கீழ் உள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின்

நிலையைக் கவனத்தில் கொண்டும், அனைவருக்கும் கை கொடுத்து தூக்கி செயல்பட வேண்டும் என்ற மனித நேய அடிப்படையில் தமது சேவைத் தொடர்வதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சிரமத்தை எதிர் நோக்கி வரும் மனிதர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் உதவிடும் வகையில் பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன் முன்னெடுத்து தெரிவிக்கப்படும் தகவல்கள் முறையான பரிசீலனைக்குப் பிறகு, தாம் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து உதவிநிதியை வழங்கி வருவதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.
Comments
Post a Comment