கல்வியைப் போல விளையாட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறக்க வேண்டும் - சிவாலெனின்!!



சுங்கை, மே 8 - தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் தனித்துவமாய் சிறந்து விளங்க வேண்டும் என சுங்கை குரூயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர் சிவாலெனின் கோரிக்கை விடுத்தார்.




அதே வேளையில், தமிழ்ப்பள்ளியில் விளையாட்டில் ஆளுமைக் கொண்டிருக்கும் மாணவர்கள் இடைநிலைப்பள்ளியிலும் அத்துறையில் மிளிர வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.





தமிழ்ப்பள்ளியைப் போல் இடைநிலைப்பள்ளியில் வாய்ப்புகள் நமக்காக காத்திருக்கிறாது என்று நினைவுறுத்திய அவர் வாய்ப்புகளைத் தேடி அதனை தனதாக்கி விளையாட்டுத்துறையிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முத்திரைப் பதிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.


சுங்கை குரூயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்து பேசுகையில் சிவாலெனின் இவ்வாறு கூறினார்.




மேலும்,சுங்கை குரூயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளியாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டி உட்பட இப்பள்ளி முன்னெடுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெருமிதமாகவும் தனித்துவ சிறப்பையும் கொண்டிருப்பதையும் சுட்டிக்காண்பித்து பேசிய அவர் பள்ளி தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தையும் பாராட்டினார்.



முன்னதாக தலைமையுரை ஆற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பூ.மோகன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும் பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எத்தகைய சூழலும் உணர்வும் ஏற்படுமோ,அத்தகைய நிலையை இப்பள்ளி மாணவர்களும் உணர வேண்டும் என்பதற்காலவே விளையாட்டுப் போட்டி மட்டுமின்றி எல்லா நிகழ்ச்சிகளும் ஆசிரியர்களால் சிரத்தை எடுத்து நனிச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுவதாக கூறினார்.


அதுமட்டுமின்றி,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் வாரியக்குழுவும் வழங்கிடும் ஆதரவுன் ஒத்துழைப்பும் இப்பள்ளியின் முன்னெடுப்புகளுக்கு பெரும் பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டார்.


மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கு பெற்றோர்களோடு துரோலாக் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு.எடிசன்,சுங்கை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரும் பத்தாங் பாடாங் மாவட்டத் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவருமான திரு.தியாரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. - Alaiolinews

Comments

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!