எஸ்.எஸ்.மணிமாறன்
சுங்கை பூலோ மே 3- இங்கு, சுங்கை பூலோ வட்டாரத்தில் மிகவும் பழமையான தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான ஆர்.ஆர்.ஐ தமிழ்ப் பள்ளி ப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 42 ஆவது ஆண்டு ப் பொதுக் கூட்டத்தில் திருநாவுக்கரசு மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக தினகரனும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் என்று பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்மாமணி புஷ்பராணி கிருஷ்ணன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
பெட்டாலிங் பெர்டானா மாவட்ட த் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் கோவிந்தசாமி இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து தலைமையேற்று கூட்டத்தை நேர்த்தியாக வழி நடத்தியதோடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தினரை தெரிவு செய்ததாக அவர் கூறினார். இக்கூட்டத்தில் சுமார் 70 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்ததோருக்கு பட்டாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதாக தலைமையாசிரியர் புஷ்பராணி அலை ஒளியிடம் கூறினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வளர்ச்சிக்காக 10 ஆயிரம் ரிங்கிட் முன்னெடுக்கப்பட்டு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
.jpeg)

Comments
Post a Comment