துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் ‘அறிவியல்’ இலக்கொலி (Podcast) தொடக்கம் - ஆசிரியர் தனேசு பெருமிதம்!!




By Siva Lenin

பாகான் டத்தோ,மே06 - கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பாகான் பாசீர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக அறிவியல் இலக்கொலி (Science Podcast) சேவையை அந்தப் பள்ளி அறிமுகப்படுத்தியுள்ளது.

வகுப்பறையைத் தாண்டிய கல்வி

அறிவியல் பாடத்தை மாணவர்கள் வெறும் வகுப்பறையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், பயணம் செய்யும் போதும் செவிவழியாகக் கேட்டுப் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீனத் தொழில்நுட்பமான "Spotify" தளத்தின் வாயிலாக இந்த இலக்கொலி சேவையை மாணவர்கள் 24 மணிநேரமும் அணுக முடியும் என்பது கூடுதல் சிறப்பு.


இந்த முன்னோடித் திட்டத்தைத் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் மாணவ நலத் துணைத் தலைமையாசிரியர் திரு.தனேசு பாலகிருட்டிணன அவர்கள் வடிவமைத்து உருவாக்கியுள்ளார். மாணவர்கள் பாடக் கருத்துகளை எளிமையாகவும் சுவாரசியமாகவும் உள்வாங்கிக் கொள்ள இம்முறை பெரிதும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து ஆசிரியர் தனேசு பாலகிருட்டிணன் கூறுகையில்,

"அறிவியல் அற்புதங்களை மாணவர்கள் எங்கிருந்தும், எப்போதும் கேட்டு மகிழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். 'அறிவியல் கற்போம்... உலகை வெல்வோம்' எனும் தாரக மந்திரத்தோடு இந்த அறிவுப் பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்," எனத் தெரிவித்தார்.

இலக்கொலியைக் கேட்கும் முறை

மாணவர்களும் பெற்றோர்களும் தங்களின் கைபேசி அல்லது கணினி வாயிலாகப் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி இந்த இலக்கொலி சேவையைக் கேட்கலாம்:

🔗 https://bit.ly/Science_Thanesh


தமிழ்ப்பள்ளி வரலாற்றில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்தப் முயற்சியைப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.- Alaiolinews

Comments

  1. வணக்கம்

    செய்திக்கு மிக்க நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாநில அளவில் அனுமதியற்ற 688 வழிப்பாட்டுத் தலங்கள், சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியும் தர்க்கம். பாப்பா ராய்டு விளக்கம்.

வெ.52,120 செலவில் இந்தியர் இடுகாடு சாலை சீரமைப்பு - மாண்புமிகு சிவகுமாருக்கு நன்றி!!

மலேசிய இந்துக்கள் மிகச்சிறப்பாகவும் பக்தியுடனும் சித்திராப் பௌர்ணமியை கொண்டாடுகின்றனர் ; டத்தோ சிவநேசன் கூறினார்..!